தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கூழாங்கல்' படம் விருது வாங்குவது உறுதி: விக்னேஷ் சிவன் பெருமிதம் - tamil cinema news

koozhangal Movie: எங்களுக்கு கூழாங்கல் அதிகமான பெருமையை பெற்று கொடுத்த படம். நாங்கள் எந்த திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் கூழாங்கல் ஏதாவது ஒரு விருதை வாங்கி கொண்டு இருக்கும் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 9:59 PM IST

விக்னேஷ் சிவன்

சென்னை: அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில், ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் 'கூழாங்கல்'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். உலகின் பல்வேறு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறது.

மேலும், கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் சிறந்த அயல்நாட்டு திரைப்பட பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. கூழாங்கல் படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் பேசும்போது, “இது எங்கள் தயாரிப்பில் முதல் படம். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான, புதுமையான நல்ல படங்களை தயாரிக்கலாம் என்று நினைத்து துவங்கினோம்.

அப்போது இந்த படத்தை பார்த்தோம். இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் கொண்டு சேர்த்தால் சர்வதேச அளவில் ரசிகர்கள் இந்த மாதிரியான படங்களை கொண்டாடுவார்கள். நிறைய விஷயங்கள் புதிதாகவும், மனநிறைவும் இருக்கும். நானும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்றிருக்கிறேன் என்றார்.

கேன்ஸ் திரைப்பட விழா போன்ற மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போது அவர்களின் சினிமா ரசனை வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரியான திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை. எங்களுக்கு அதிகமான பெருமையை ஈட்டு கொடுத்த படம் கூழாங்கல்.

நாங்கள் எந்த திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் கூழாங்கல் திரைப்படம் ஏதாவது ஒரு விருதை வென்றுவிடும். அதிலும் ஆஸ்கருக்கான தேர்வில் இந்த படம் பரிந்துரையில் இருந்தது மிகவும் சந்தோஷம். வாழ்நாளில் மறக்க முடியாத சந்தோஷத்தை கூழாங்கல் கொடுத்தது. கேன்ஸ் ஃபிலிம் பெஸ்டிவலில் கூட என்னை கூழாங்கல் தயாரிப்பாளர் என்று தான் அறிமுகப்படுத்தி கொண்டேன்.

கூழாங்கல் மிகவும் கஷ்டப்பட்டும், இயக்குநர் வினோத் பார்த்த, உணர்ந்த விஷயங்களை வைத்து எடுத்த படம். இந்த படத்தை மணிரத்னம் பார்த்து விட்டு, இந்த மாதிரி சினிமாவை நீங்கள் தயாரித்தது பெருமையாக இருக்கிறது என்று பாராட்டியதாகவும், வெற்றிமாறனும் இந்த படத்தை பார்த்து பாராட்டினார் என்று கூறினார்.

இந்த ஒரு படத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் அனுபவங்களை மறக்க முடியாது. இதை தியேட்டர்களில் கொண்டு வர வேண்டும் என்று ஆசை. ஆனால் சில காரணங்களால் தள்ளி போய் கொண்டு இருந்ததாகவும், இந்த படத்தின் ரசிகர்களுக்காக சர்வதேச தரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சோனியில் வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு தொடக்கமாக பார்க்கிறோம் என்றும் எந்த திரைப்பட விழாவுக்கு சென்றாலும் கூழாங்கல் படத்தை அடையாளமாக எடுத்து செல்வேன்” என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் வினோத் ராஜ், ”விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோருக்கு கூழாங்கல் படம் ரொம்ப பிடித்து விட்டது. பின்னர் ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் போய் நல்ல வரவேற்பு கிடைத்தது” என்றும் படத்தின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: நடிகர் விக்ரமின் தங்கலான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details