தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் நிதின் சத்யா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் கொடுவா - நிதின் சத்யா

நடிகர் நிதின் சத்யா நடிப்பில் கொடுவா என்கிற படம் இன்று(ஆக.29) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் ’கொடுவா’
நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் ’கொடுவா’

By

Published : Aug 29, 2022, 8:19 PM IST

Updated : Aug 29, 2022, 8:50 PM IST

தயாரிப்பாளர்கள் பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் நிதின் சத்யா நடிப்பில் ‘கொடுவா’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

ராமநாதபுரத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் யதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை.

’பேச்சுலர்’ படத்தில் இணை இயக்குநராகப்பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இன்று(ஆக.29) நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் 'ஐங்கரன்' கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குநர் ராஜேஷ் M செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இதையும் படிங்க: இசைப்புயலை கவுரவித்த கனடா நாட்டின் மேயர்... ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் நெகிழ்ச்சி

Last Updated : Aug 29, 2022, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details