தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் "ஃபைண்டர்" - படப்பிடிப்பு தொடக்கம்! - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் "ஃபைண்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

finder
finder

By

Published : Nov 28, 2022, 4:23 PM IST

சென்னை: இயக்குநர் வினோத் ராஜேந்திரன், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் "ஃபைண்டர்" என்ற திரில்லர் திரைப்படத்தை இயக்குகிறார். இதனை அரபி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், இப்படம் எடுக்கப்படுகிறது.

சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சார்லி நடிக்கிறார். இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி, பிரானா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ.28) பூஜையுடன் தொடங்கியது. சென்னை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "வெப்சீரிஸ் பார்ப்பது சுற்றுலா போன்றது": புஷ்கர்-காயத்ரி

ABOUT THE AUTHOR

...view details