தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விடாமுயற்சி முதல் தங்கலான் வரை.. நெட்ஃபிளிக்ஸ் பண்டிகை 2024 முழு பட்டியல்! - மஹாராஜா

Netflix Pandigai 2024: பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2024ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

2024இல் விடாமுயற்சி முதல் தங்கலான் வரை நெட்பிளிக்ஸில் வெளியாகும் திரைப்படங்கள் பட்டியல்
2024இல் விடாமுயற்சி முதல் தங்கலான் வரை நெட்பிளிக்ஸில் வெளியாகும் திரைப்படங்கள் பட்டியல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 1:54 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 2024ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள தங்கள் காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து அனுபவித்த பின்னர், மீண்டும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் இல்லத்திலும் பார்த்து ரசிக்கலாம்.

இந்த 9 படங்களின் பட்டியலை Netflix Pandigai என்ற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி', நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் 21வது படம் (SK21) மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் இந்த வருடம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி நிறுவன அதிகாரி இது குறித்து கூறுகையில், "பொங்கல் பண்டிகை நாளில் வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகமூட்டுவதற்காக தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களின் பிளாக்பஸ்டர் படங்கள், அதன் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்பு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த வருடம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பான லியோ, துணிவு, மாமன்னன் போன்ற படங்கள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நெட்ஃபிளிக்ஸின் 5 சதவீத வளர்ச்சி தென்னிந்திய மொழி திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றில் இருந்துதான் கிடைக்கிறது. இந்த வருடம், இந்த புதிய படங்களின் வரவு எங்கள் நெட்ஃபிளிக்ஸ் உறுப்பினர்களை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்தும்" என்றார்.

நெட்ஃபிளிக்ஸ்தளத்தில் 2024ஆம் ஆண்டு வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்:

  1. விடாமுயற்சி - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
  2. கான்ஜூரிங் கண்ணப்பன் - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
  3. கன்னிவெடி - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
  4. மஹாராஜா -தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
  5. ரிவால்வர் ரீட்டா - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
  6. சிவகார்த்திகேயன் 21 (SK21) - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
  7. சொர்க்கவாசல் - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
  8. தங்கலான் -தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
  9. இந்தியன் 2 -தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

நெட்ஃபிளிக்ஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் 247 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் டிவி தொடர்கள், படங்கள் மற்றும் ஆவணப் படங்களை பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தருகிறது.

இதையும் படிங்க:சாப்பிடும் முன் வழிபட்ட விஷால்… யோகிபாபு கொடுத்த ரியாக்சன் வைரல்!

ABOUT THE AUTHOR

...view details