சென்னை:இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ’கோலாமாவு கோகிலா’, ’டாக்டர்’, ’பீஸ்ட்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் மிக முக்கியமான இயக்குநராகத் திகழ்ந்து வருகிறார். அவர் இயக்கி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்கள், மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து, நடிகர் விஜயை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்தது. இப்படிப்பட்ட மாறுபட்ட கூட்டணியின் திரைப்படத்தை காண ரசிகர்கள் மற்றுமின்றி பொதுமக்களும் பெரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில்,பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் நெல்சன், விஜய் கூட்டணியில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களைப் பெரிதாக திருப்திப்படுத்தவில்லை.
மேலும், இதற்குக் காரணம் நெல்சனின் பலவீனமான திரைக்கதை தான் என்று விமர்சகர்கள் பெரும்வாரியாக நெல்சனை சாடினர். இந்நிலையில், ’பீஸ்ட்’ திரைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அவருக்கும் இந்தப்படம் பெரிதாக சோபிக்கவில்லையென்றும், ‘ஐஸ்கிரீம் கூட நல்லா இருக்குது..!” என நக்கலாக கமெண்ட் அடித்தார் என்றும் தகவல்கள் கசிந்தன.