தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை..! - nayanthara vignesh sivan marriage invitation

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் வருகிற 9-ஆம் தேதி அன்று மகாபலிபுரத்தில் நடக்கவிருப்பதாக அச்சடிக்கப்பட்ட திருமண பத்திரிக்கை ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை..!
வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை..!

By

Published : May 28, 2022, 5:22 PM IST

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், இருவரும் நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். மேலும், இருவரும் இணைந்து கோவில் கோவிலாக சென்றுவந்ததும் நாம் அறிந்ததே. சமீபத்தில் கூட இருவரும் இணைந்து விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்துவிட்டு வந்தனர்.

இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என முன்பிருந்தே தகவல் வெளியாகி வந்துள்ளது. இந்நிலையில், தற்போது அவர்கள் திருமண பத்திரிக்கை இன்று(மே 28) இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கும் திருமணத்தில் தென்னிந்திய சினிமாத்துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க: கமல் தயாரிப்பில் தொடர்ந்து நடிக்கவிருக்கும் முன்னணி நடிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details