தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Nayanthara: Beyond the fairytale - நெட்பிளிக்ஸில் வெளியாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் - gowtham vasudev menon

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம், நெட்பிளிக்ஸில் 'Nayanthara: Beyond the fairytale' என பெயரிடப்பட்டு ஆவணப்படமாக வெளியாக உள்ளது.

Nayanthara: Beyond the fairytale; நெட்பிளிக்ஸில் வெளியாகும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம்
Nayanthara: Beyond the fairytale; நெட்பிளிக்ஸில் வெளியாகும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம்

By

Published : Aug 9, 2022, 1:15 PM IST

கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையில் மாமல்லபுரத்தில், நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அவர்களின் திருமணம் ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் 'Nayanthara: Beyond the fairytale' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு வெளியாக உள்ள ஆவணப்படங்கள் குறித்த அறிவிப்பு வீடியோவில் நெட்பிளிக்ஸ் இதனை அறிவித்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்ய நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதற்கான முன்னோட்டத்தை வெளியிட்டு படம் வெளியாவதை உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தடைகளை கடந்து உருவான 'கடாவர்' திரைப்படம் - அமலாபால்

ABOUT THE AUTHOR

...view details