தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு எப்போது..? - நயன்தாரா திருமணம்

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ’நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி நிறுவனம் பிரத்யேகமாக ஒளிபரப்பவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு எப்போது..?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு எப்போது..?

By

Published : Jun 9, 2022, 9:12 PM IST

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இன்று (ஜூன் 9) மஹாபலிபுரத்தில் பிரமாண்ட முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்தத் திருமணத்தில் திரையுலகத்தைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமண நிகழ்வில் ’ஜிம் பாய்ஸ்’ பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த திருமணத்தில் வி.வி.ஐபி-களைத் தவிர மற்ற யாருக்கும் செல்போன்கள் அனுமதிக்கப்படவில்லை. 'ஜிம் பாய்ஸ்' கூட இந்த நிகழ்வை நடத்திய மும்பையைச் சேர்ந்த தனியார் விழா ஒருங்கிணைக்கும் நிறுவனத்தால் அமர்த்தப்பட்டவர்கள் தான்.

இத்தனை பாதுகாப்பு பலப்படுத்தும் வேலைகள் ஏனென்றால், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வை ’நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம் பிரத்யேகமாக ஒளிபரப்பவுள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சியை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கவிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

அதனால், அந்தக் காட்சிகள் எதுவும் ஒளிபரப்பிற்கு முன்னரே வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகவே இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளாம். மேலும், இந்த நிகழ்வை 'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி நிறுவனம் ரூ.25 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும் ஒரு பக்கம் பேசப்படுகிறது. இந்த நிகழ்வின் ஒளிபரப்புத் தேதியை விரைவில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள் விவரம் இதோ!

ABOUT THE AUTHOR

...view details