நடிகை நயன்தாரா தற்போது தனது மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், இந்த “லேடி சூப்பர் ஸ்டார் 75” திரைப்படம் இன்று காலை சென்னையில் எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து இந்தப் படத்தின் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா கூறுகையில், “எனது முதல் படத்தை ZEE Studios, Trident Arts ஆகிய இரண்டு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, உணர்கிறேன். நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக் கதையில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .
இது அவரது 75வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன் உள்ளேன். திரைப்பட உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குநர் ஷங்கர் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது”, என கூறினார்.
இந்த திரைப்படத்தில் இணைந்தது குறித்து ZEE Studios தென்னக தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், "லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் இந்த மதிப்புமிக்க படத்தில் நாங்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பூஜையுடன் தொடங்கிய ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’ இருபது ஆண்டுக்கு மேலாக திரைத்துறையில் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் நயன்தாராவின் நடிப்பில் , திறமையான நிலேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்படும் இந்தத் திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. Zee Studios ல், மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த படம் அதில் ஒரு சிறந்த படியாக அமையும்”, என தெரிவித்தார்.
பூஜையுடன் தொடங்கிய ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’ “நயன்தாரா 75" திரைப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர், மேலும் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:“ஆனந்த யாழை மீட்டியவனுக்கு பிறந்தநாள் இன்று”- நா.முத்துக்குமார் 47ஆவது பிறந்தநாள்