தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒருவரை ஒருவர் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் வரும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையம் வந்து பின்னர் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை வழுத்தியூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.