சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா சத்யபாமா பல்கலைக்கழகத்தின் விளம்பர தூதராக பொறுப்பேற்றுள்ளார். சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் விழாவில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய நடிகை நயன்தாரா, 'கல்லூரிக் காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுடைய வாழ்க்கையையே மாற்றக்கூடியவை. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. மேலும் படித்து முடித்து உயரத்தை அடைந்த பிறகும் எப்போதும் பணிவுடன் இருங்கள்' என்று மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.