நடிகர் யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ’மண்டேலா’ திரைப்படத்திற்கு 2020ஆம் ஆண்டின் சிறந்த திரைக்கதை வசனத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அரசியல் நக்கல் கலந்த டிராமா திரைப்படமாக வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தேசிய விருதுகள் 2020: சிறந்த திரைக்கதை வசனம் - ‘மண்டேலா’ - மடோன் அஸ்வின்
2020ஆம் ஆண்டிற்கான திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிய ‘மண்டேலா’ திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதை வசனத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருதுகள் 2020 : சிறந்த திரைக்கதை வசனம் - ‘மண்டேலா’
மேலும், காமெடி நடிகர் என்பதைத் தாண்டி யோகி பாபுவை ஓர் குணச்சித்திர நடிகராகவும் இப்படம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் தற்போது தேசியவிருதையும் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ’மாவீரன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.