இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி நடித்துள்ள 'நதி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. இவ்விழாவில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, வடிவேல் முருகன், கரு.பழனியப்பன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகை கயல் ஆனந்தி, “இக்கதையை கேட்டதுமே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று உடனே தோன்றியது. இக்கதைக்கு தேவையானது போல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். அனைவரும் படம் பார்த்துவிட்டு சப்போர்ட் செய்யுங்கள். மேலும் நல்ல கதைகள் கிடைத்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்” என்றார்.
மேலும் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “இங்கு உள்ள எல்லோரும் எனக்கு தாமரையை பிடிக்கும் என்றனர். எனக்கும் தாமரையை பிடிக்கும். நான் இயக்குநர் தாமரையை சொன்னேன். ஒரு நடிகன் எதிர்மரை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது திரையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.