தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'நடிப்புக்கு டாட்டாவா..., நெவர்': நாசர் திட்டவட்டம் - சென்னை

தாம் நடிப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை, என்று நடிகர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிப்புக்கு டாட்டாவா, நெவர் நாசர் திட்டவட்டம்
நடிப்புக்கு டாட்டாவா, நெவர் நாசர் திட்டவட்டம்

By

Published : Jun 30, 2022, 3:25 PM IST

Updated : Jul 1, 2022, 4:04 PM IST

திரைத்துறையில் மிக முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் நாசர். எந்தவிதமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி நடிக்கும் நடிகர்களில் நாசர் முக்கியமானவர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நாசர் நடிப்புக்கு முழுக்குப்போடுவதாக தகவல் பரவியது.

மேலும் கரோனா தொற்று காலத்தில் இதய பாதிப்புகளால் நாசர் கடுமையாக அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தன்னுடைய உடல்நிலையை கருத்திக் கொண்டு தான் நாசர் இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்தி பரவியது.

ஆனால், நடிகர் நாசர் தரப்பு இதனை மறுத்துள்ளது. மிகவும் ஆரோக்கியத்துடன் ஏகப்பட்ட வெப் சீரிஸ், சில படங்களில் பிசியாக நடிச்சிக்கொண்டு இருக்கிறார் நாசர். குறிப்பாக நடிகர் சங்க கட்டிடப் பணியை விரைவில் முடித்து முதலமைச்சர் கரங்களால் அதை திறக்க வைக்கும் நிகழ்வை முடிக்கும் வரை முன்பைவிட தற்போது ஆக்டிவாக இருப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:2023 தீபாவளிக்கு ரெடியாகும் ’மாயோன் 2’!!

Last Updated : Jul 1, 2022, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details