செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தனுஷ் சைக்கோ போன்ற ஒரு கதாப்பாத்திரத்திலும், சற்று வயது முதிர்ந்த கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளது டீஸரைப் பார்க்கும்போது தெரிகிறது.
இந்த திரைப்படத்தில் படத்தின் இயக்குநரான செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இந்தப் படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.