இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி’, இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
Veera Simha Reddy: ஜன.12ல் 'வீர சிம்ஹா ரெட்டி' வெளியீடு! - ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் கோபிசந்த் இயக்கும் மலினேனிமைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக்கிற்கான மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக பாலகிருஷ்ணாவின் படங்கள் சங்கராந்தியில் வெளியிட்டதால் வெற்றியடைந்துள்ளன. இதன் காரணமாக இப்படமும் சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:நடிக்காத படத்திற்கு போஸ்டர்.. பொங்கி எழுந்த யோகி பாபு.. ஆடியோவில் கூறியது என்ன..?