தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி! - கீர்த்தி ஷெட்டி

வெங்கட்பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படத்திற்கு கஸ்டடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 23, 2022, 12:33 PM IST

மாநாடு படத்தின்‌ மிகப் பெரிய‌ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இன்று நாக சைதன்யாவின் பிறந்தநாள் என்பதால் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி இப்படத்திற்கு *'கஸ்டடி'* என பெயர வைக்கப்பட்டுள்ளது.

நேர்மையான மற்றும் தீவிரமான ஒரு போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா *சிவா* என்ற கதாபாத்திரத்தில் தீமைக்கு எதிரானவராக நிற்கிறார். வழக்கமாக வெங்கட்பிரபு படங்களில் இடம்பெறும் டேக் ரசிகர்களிடையே கவனத்தைப் பெறும். அதுபோல, இந்தப் படத்திற்கு *'A Venkat Prabhu Hunt'* என்ற டேக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள அனைத்து போஸ்டர்களும் இந்தக் கதை ஒரு ஆக்‌ஷன் எண்டர்டெயினராக இருக்கும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க : வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி மிருகங்கள்?

ABOUT THE AUTHOR

...view details