செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'நானே வருவேன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டாவது பாடலான ’ரெண்டு ராஜா’ பாடல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக வெளியான வீரா சூரா பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் , இந்த பாடலுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. தனுஷ் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ளனர்.