சென்னை:நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் தனுஷ் - செல்வராகவன் இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கும் நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரித்துள்ளார். புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.