சென்னை:சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'நானே வருவேன்'. கலைப்புலி தாணு தயாரிப்பில் படப்பிடிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இப்படத்தில் இந்துஜா நாயகியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு வேடங்களின் லுக் சமீபத்தில் வெளியானது.
'நானே வருவேன்' படப்பிடிப்பு நிறைவு : 'விரைவில் வருகிறான்..!' - நடிகர் தனுஷ் ட்வீட்! - தனுஷ்
தனுஷின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படமான ’நானே வருவேன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
'நானே வருவேன்' படப்பிடிப்பு நிறைவு : 'விரைவில் வருகிறான்..!' - தனுஷ் ட்வீட்!
இதில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’நானே வருவேன்’ படப்பிடிப்பு முடிந்தது. ’விரைவில் வருகிறான்...!’ ‘ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் காவல்துறைக்கு சொன்ன அட்வைஸ்... கேட்குமா தமிழ்நாடு போலீஸ்?