தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விமர்சகர்கள் பாராட்டும் வட சென்னையை மையப்படுத்திய என்4 திரைப்படம் - audience support

இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கத்தில் வெளியாகிய என்4 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

விமர்சகர்கள் பாராட்டும் வட சென்னையை மையப்படுத்திய என்4 திரைப்படம்
விமர்சகர்கள் பாராட்டும் வட சென்னையை மையப்படுத்திய என்4 திரைப்படம்

By

Published : Mar 25, 2023, 4:11 PM IST

சென்னை:இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளி கிழமையன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் என்4. வட சென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை சிறப்பாக எடுத்துக்காட்டி உள்ள படமாக இது உள்ளதாக கூறி படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் சின்னத்திரை பிரபலங்களான மைக்கேல், கேப்ரில்லா, பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா, அப்சல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் காசிமேடு துறைமுக பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலை யதார்த்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பகுகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் வட சென்னையில் வசிப்பவர்கள் என்றால் ரவுடி, கூலிப்படை, கொடூரமானவர்கள் என்று காட்சிப் படுத்தப்படும் நிலையில் இப்படம் அதற்க்கெல்லாம் மாறாக இயக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்து தனது படங்களில் வட சென்னை வாழ் மக்களை அவ்வாறு காட்டிவருவதாக குற்றச்சாட்டுகள் எழ தொடங்கியுள்ளன. ஆனால், இப்படத்தில் வட சென்னை மக்கள் உழைத்து வாழ்பவர்கள் என்றும் நேர்மையானவர்கள் என்றும் காட்டப்பட்டுள்ளதாக படம் பார்த்தவர்கள் பாராட்டி உள்ளனர்.

இதையும் படிங்க:விக்ரம் படம் போல் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும் - சிம்பு

ABOUT THE AUTHOR

...view details