பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான ராம்கோபால் வர்மா மற்றும் இஷா கோபிகர் மீண்டும் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, MX அசல் தொடரான “தகனம்” தொடரில் இணைந்துள்ளனர். ட்ரெய்லரின் வழியே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்தத் தொடர், தற்போது ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள தொடர்களில் ஒன்றாகும்.
இந்த MX ஒரிஜினல் தொடரில் இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மிகச்சிறப்பான நிஜ வாழ்க்கை சித்தரிப்புகள் மற்றும் வலுவான அழுத்தமான உள்ளடக்கத்திற்காக அனைவராலும் விரும்பப்படும் இயக்குநர், ராம்கோபால் வர்மா. பார்வையாளர்களை எப்போதும் இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும் பரபர விறுவிறு கதைகளைத் தருவதில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். பல திரைப்படங்களில் ஒன்றாகப் பணியாற்றிய வர்மாவும் இஷா கோபிகரும் மீண்டும் இணைந்து, பணியாற்றுவதன் மூலம் ‘தகனம்’ தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர்.
பல்வேறு திறமைகள் வாய்ந்த நடிகர் குழு:இஷா கோபிகர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு காவலர் வேடத்தில் இந்தத் தொடரில் அவதாரம் எடுத்துள்ளார். அவரது கதாபாத்திரமான அஞ்சனா சின்ஹா, கடினமாக உழைத்து, க்ரைம் அதிகமாக இருக்கும் நகரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அமைதியைக் கொண்டுவருகிறார். மேலும் அவர் இத்தொடரின் சூத்திரதாரராகவும் இருக்கிறார்.
பவானி வேடத்தில் நடிக்கும் நடிகை நைனா கங்குலி, பெங்காலி மற்றும் தென்னிந்திய படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் ’தகனம்’ தொடரில் பழிவாங்கும் நக்சலைட் வேடத்தில், பன்முகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். திறமையின் வடிவமாக விளங்கும் நடிகர் அபிஷேக் துஹான், தகனத்தில் ‘ஹரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.