தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எனது 12 ஆண்டு கால கனவு இப்படத்தில் உள்ளது - 'டாடா' படம் குறித்து நடிகர் கவின் உருக்கம் - tamil movie release

நடிகர் கவின் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படம் குறித்து நடிகர் கவின்,'இது எனது மூன்றாவது படம். எனது 12 ஆண்டுகளின் கனவு இப்படத்தில் உள்ளது’ எனக் கூறினார்

எனது 12 ஆண்டு கால கனவு இப்படத்தில் உள்ளது - நடிகர் கவின்
எனது 12 ஆண்டு கால கனவு இப்படத்தில் உள்ளது - நடிகர் கவின்

By

Published : Feb 10, 2023, 2:55 PM IST

எனது 12 ஆண்டு கால கனவு இப்படத்தில் உள்ளது - நடிகர் கவின்

இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள டாடா திரைப்படம் இன்று‌ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சின்னத்திரை நடிகரான நடிகர் கவினுக்கு சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதனைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் சின்ன வேடங்களில் சில படங்களில் நடித்தார். அதன் பிறகு 2019ஆம் ஆண்டு ’நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு இவர் நடித்த ’லிஃப்ட்’ திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரம் கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து தற்போது டாடா என்ற படத்தில் தந்தையாக நடித்துள்ளார். இளம் வயதிலேயே இத்தகைய பெரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அனைவரும் பாராட்டுகின்றனர். இவரது எமோஷனல் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம்‌ குறித்து கவின்‌ கூறியதாவது, 'அனைவருக்கும் வணக்கம். நான் நடித்துள்ள டாடா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எனது படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இது எனது மூன்றாவது படம். எனது 12 ஆண்டு கால கனவு இப்படத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு என்னை அழைத்து வந்துவிட்ட அனைவருக்கும் நன்றி. சிறப்பு காட்சி பார்த்த பத்திரிகையாளர்கள், எனது நண்பர்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.

ஒரு சாதாரண பையனின் வாழ்க்கை தான் இந்த கதை. காமெடி கடந்து இது ஒரு எமோஷனலான படம். நீங்கள் வீட்டுக்குச் செல்லும் போது நல்ல படம் பார்த்த திருப்தியை உங்களுக்கு கொடுக்கும். குடும்பத்துடன் வந்து அனைவரும் படம் பார்த்து ஆதரவு தர வேண்டும். படத்தை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details