தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'முத்துவேல் பாண்டியன் அரைவுடு'' - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட் - latest tamil news

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் அவரது கதாப்பாத்திர வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட்
ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட்

By

Published : Dec 12, 2022, 7:43 PM IST

நடிகர் ரஜினிகாந்தின் 72ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் விதமாக, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் கதாப்பாத்திர பெயரை பதிவிட்டு, ’முத்துவேல் பாண்டியன் வருகிறார்’ என ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது, ஜெயிலர் படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரத்தின் லுக்கை வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக ஜெயிலர் படத்தின் நடிகர்கள் மற்றும் இயக்குநர் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க:விண்டேஜ் லுக்கில் மிரட்டும் எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் - வெளியானது ஜிகர்தண்டா 2 டீசர்

ABOUT THE AUTHOR

...view details