தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இளையராஜா இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு! - tamil cinema news

இளையராஜா இசையமைத்துள்ள பன்மொழி திரைப்படமான 'மியூசிக் ஸ்கூல்' திரைப்படத்தில் 'மம்மி சொல்லும் வார்த்தை' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 7, 2023, 2:23 PM IST

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது இசையால் நம் அனைவரது வாழ்விலும் ஒர் அங்கமாகத் திகழ்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு இசையமைத்து திரைத்துறையில் சகாப்தமாக விளங்குபவர். இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தற்போது உள்ள இளம் இசையமைப்பாளர்களுக்குப் போட்டியாக திரைத்துறையில் திகழ்பவர். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது.

குறிப்பாகக் காட்டுமல்லி என்ற பாடல் இளம் தலைமுறை இசை ரசிகர்களின் இதயம் தொட்ட பாடலாக மாறிவிட்டது. இந்நிலையில் பன்மொழி இசை கலந்து உருவாகும் "மியூசிக் ஸ்கூல்" என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். 'மம்மி சொல்லும் வார்த்தை' என ஆரம்பிக்கும் இப்பாடல் படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையிலும், இன்றைய நவீனக்கால இளைஞர்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

வாழ்வில் ஜெயிக்க மிக உயர்ந்த கல்வித் தகுதியை அடைய வேண்டுமென வற்புறுத்தும், பெற்றோரின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை நுட்பமாகக் கேலி செய்யும் 'மம்மி சொல்லும் வார்த்தை' பாடல், குழந்தைகள், பெற்றோரைப் அல்லாமல் சுதந்திரமாக வாழ்வதைப் பற்றியும், நவ நாகரீக இளைஞர்களின் உலகைப் படத்தின் கதாபாத்திரங்கள் வழியாக அழகாகச் சித்தரிக்கிறது.

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள 'மம்மி சொல்லும் வார்த்தை' பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார், பிரியா மாலி, சரத் சந்தோஷ், ஹிருத்திக் ஜெயகிஷ், நேஹா கிரிஷ், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் RS ரக்தக்‌ஷ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். நடன இயக்குநர் ஆடம் முர்ரே இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தைக் கூறுவதுடன், "மியூசிக் ஸ்கூல்" திரைப்படம், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. கல்விச் சாதனைகள் மற்றும் கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளின் சமநிலையை வலியுறுத்தும் இத்திரைப்படம், மிக முக்கியமான மற்றும் தீவிரமான ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்கு முறையில் 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது.

இளையராஜா இசையில் உருவாகும் மியூசிக் ஸ்கூல் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!!

இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. பிவிஆர் இந்தி, தமிழ்ப் பதிப்புகளையும், தில் ராஜு தெலுங்கு பதிப்பையும் மே 12ம் தேதி வெளியிடுகிறார்கள்.

இதையும் படிங்க:'கண்ணா ரெண்டு லட்டு பாக்க ஆசையா'; மணிரத்னத்தின் PS2 வெளியாக இருக்கும் நிலையில் மீண்டும் திரைக்கு வரும் PS1

ABOUT THE AUTHOR

...view details