தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரசிகர்களே வைப் பண்ண ரெடியா?... மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் ஆண்டனி! - vijay antony live in concert date

vijay antony live in concert: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்திய நிலையில், மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 3:42 PM IST

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.‌ இவரது நான், பிச்சைக்காரன், சலீம், சைத்தான் உள்ளிட்ட படங்கள் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படங்களாக உள்ளன. இசை அமைப்பாளராக முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நாக்கு முக்கா, புலி உறுமுது, தோழியா காதலியா, உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் விஜய் ஆண்டனி இசையமைத்த பாடல்களில் பிரபலமானவை. சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் கடைசியாக பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்தார். இவரது நடிப்பில் தற்போது ரத்தம் என்ற படம் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் ஆண்டனி சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இசை நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம், தேதி உள்ளிட்டவை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனிக்கு இந்த இசை நிகழ்ச்சி நல்லதொரு மன அமைதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளார்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஏஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி இம்மாதம் நடைபெற உள்ளது. அனிருத், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், தேவா போன்ற பலரும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மலையாள நடிகர் பாலியல் புகாரில் சென்னையில் அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details