சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இயக்குநர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். விர்சுவல் ரியால்டி தொழில்நுட்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள 2ஆவது படமான லீ மஸ்க் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.