தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

LGM Trailer: எம்.எஸ்.தோனி நிறுவனத்தின் எல்ஜிஎம் பட டிரைலர் வெளியீடு! - LGM Trailer out

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட எல்ஜிஎம் படத்தில் டிரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 10, 2023, 10:52 PM IST

Updated : Jul 10, 2023, 10:58 PM IST

சென்னை:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி, தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தமிழில் எல்.ஜி.எம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்விற்காக அவர் தனது மனைவி ஷாக்‌ஷியுடன் சென்னை வந்துள்ளார்.

ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் தோனி மற்றும் அவரது மனைவி ஷாக்‌ஷி தோனியும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.தோனி, "எனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுக போட்டி அரங்கேறியது சென்னை மண்ணில்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிக ரன்கள் பதிவு செய்யப்பட்டதும் சென்னையில் தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இப்போது எனது முதல் படத்தயாரிப்பு தமிழ் மொழியில் அமைந்துள்ளது. சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் இங்கு நீண்ட நாட்களுக்கு முன்பே தத்தெடுக்கப்பட்டு விட்டேன்" என தோனி உணர்ச்சி பொங்க கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இதனிடையே, தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் எல்.ஜி.எம். பட டிரைலர் வெளியீட்டை தொடர்ந்து #LGM மற்றும் #MSDhoni ஹேஷ்டேகுகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன. இந்தப் படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதல் நீ முடிவும் நீ .. "குட்நைட்" நடிகை மீதா ரகுநாத் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Last Updated : Jul 10, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details