தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை உண்டு...!' - சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூர் - Shriya Pilgaonkar

சில சமயம் தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்ததுண்டு என நடிகை மிருணாள் தாக்கூர் ஓர் யூ-ட்யூப் சேனல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

’குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை உண்டு...!’ - சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூர்
’குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை உண்டு...!’ - சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூர்

By

Published : Sep 12, 2022, 8:41 PM IST

தனது வருங்கால காதல் துணைவனிடம் தான் எதிர்பார்ப்பது குறித்தும், தன் வாழ்வில் காதல் குறித்த தனது பார்வையையும் நடிகை மிருணாள் தாக்கூர், ஓர் யூ-ட்யூப் சேனலின் நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார். பம்பில் எனும் டேட்டிங் ஆப்பின் யூ-ட்யூப் சேனல் நடத்தும் ‘டேட்டிங் திஸ் நைட்ஸ்’ எனும் நிகழ்ச்சியில் நடிகைகள் மிருணாள் தக்கூர் மற்றும் ஸ்ரேயா பில்கோவன்கர் கலந்துகொண்டனர்.

அதில் தன்னுடைய வருங்கால காதல் துணைவனிடம் தான் எதிர்பார்ப்பதை நடிகை மிருணாள் விவரிக்கையில், “எனக்கு வரவிருக்கும் துணைவன் நான் எங்கிருந்து வந்தேன், நான் என்ன சிந்திக்கிறேன், எந்தத் தொழிலில் உள்ளேன் என்பதைக் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.

என்னைச் சுற்றி நிறைய பாதுகாப்பின்மைகளை உணர்கிறேன். அதைத் தழுவி பாதுகாப்பாக அவர் இருக்க வேண்டும். இப்படியொருவரைக் கண்டுகொள்வது அரிது என்று நினைக்கிறேன்” என்றார்.

மேலும், நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஸ்ரேயா பில்கோவன்கர், “நமக்கு காலம் காலமாக இந்த காலகட்டத்தில் தான் இது நடக்க வேண்டும். அது நடக்கும்போது உங்கள் முடி காற்றில் பறக்க வேண்டும் போன்ற செயற்கைத் தனமான எண்ணங்கள் நமக்கு கடத்தப்பட்டுள்ளன. அப்படியெல்லாம் நடந்தால் சிறப்பு தான். ஆனால், இப்படித்தான் எப்பொழுதும் நடக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை” என்றார்.

“உங்களிடம் யாராவது உங்களது வயது போவதை சுட்டிக்காட்டியிருக்கிறார்களா..?” என மிருணாளிடம் ஸ்ரேயா கேட்க அதற்கு, “சில சமயம் நான் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன். என் அம்மா நான் எந்த முடிவெடுத்தாலும் சரி எனக்கு உறுதுணையாக உள்ளார். அது எனக்கே ஆச்சரியமாக உள்ளது” என்று மிருணாள் பதிலளித்தார்.

மேலும், நடிகை ஸ்ரேயா பில்கோவன்கரிடம், ”இளம் வயது ஸ்ரேயாவிற்கு நீங்களே ஒரு அறிவுரை கூற வேண்டுமென்றால் எதைக் கூறுவீர்கள்..?” எனக் கேட்ட கேள்விக்கு, “யாரை வேண்டுமென்றாலும் காதலிக்கலாம். அது பரவாயில்லை. ஆனால் அவை அனைத்தும் நிரந்தர உறவுமுறைகள் இல்லை என்பதை மட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ரூ.225 கோடி வசூல்: சாதனைப்படைத்த 'பிரம்மாஸ்த்ரா'!

ABOUT THE AUTHOR

...view details