தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மனக்காயங்களுக்கு இசை மருந்து போடும் மருத்துவர் இளையராஜா - அன்புமணி ராமதாஸ்

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தனது 80ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மனக்காயங்களுக்கு இசை மருந்து போடும் மருத்துவர் இளையராஜா
மனக்காயங்களுக்கு இசை மருந்து போடும் மருத்துவர் இளையராஜா

By

Published : Jun 2, 2022, 1:00 PM IST

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தனது 80ஆவது பிறந்தநாளை இன்று (ஜூன்2) கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவைகள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாமக கட்சி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "முத்து விழா ஆண்டில், 80ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்!

மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்.

இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா எனும் இசை தூதன்!

ABOUT THE AUTHOR

...view details