சென்னை:இந்த வாரம் ஓடிடியில், தமிழில் பூர்ணிமா ரவியின் செவப்பி என்ற திரைப்படமும், சேரனின் ஜர்னி என்ற இணையத்தொடரும் வெளியாக உள்ளன.
தமிழில் செவப்பி என்ற திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தை எம்.எஸ் ராஜா இயக்க, சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஜன.11) வெளியாகிறது. இப்படத்தை ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர்.
சேரனின் ஜர்னி என்ற இணையத் தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்தவர். கடைசியாக ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை இயக்கினார். அப்படம் சரியாக ஓடவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓடிடி தளத்திற்காக ஜர்னி என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார்.
இதையும் படிங்க:தனுஷ், எஸ்.கே, விஜய் சேதுபதி வெல்லப் போவது யார்? - பொங்கல் ரேஸில் மோதும் படங்கள் ஒரு பார்வை!
இதில் நடிகர் சரத்குமார், பிரசன்னா, கலையரசன், ஆரி அர்ஜுனன், பேட்சுலர் பட நடிகை திவ்யபாரதி, காஷ்யப்பார்பயா, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, அனுபமா குமார், நாடோடிகள் பரணி, ஆடுகளம் நரேன், இளவரசு, அஞ்சு குரியன், உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இந்த இணையத் தொடருக்கு சி. சத்யா இசையமைக்க, என்.கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜர்னி இணையத் தொடர் வருகிற ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.
இது மட்டுமில்லாமல், மலையாளத்தில் தேஜாவு என்ற படம் ஐஸ்ட்ரீம் தளத்தில் வெளியாகிறது. தெலுங்கில் அஜய் காடு திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. லிங்கோச்சா திரைப்படம் - ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லிஃப்ட், தம்பி மணி, ஆப்டர் எவிரிதிங், தி ஒன் பீஸ் எகேட் ஆர்க் ஆகிய நான்கு ஆங்கில படங்கள் வெளியாகிறது. மேலும் சில வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகிறது.
மேலும் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபள் 7 பிரைம் வீடியோவில் இந்த வாரம் வெளியாகிறது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:செருப்படியிலிருந்து இளைஞர்கள் தப்பித்துக் கொள்ள இமெயில் உதவுகிறது - இயக்குநர் பாக்யராஜ்