சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படம் பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகிறது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ’வீரம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சூர்யாவுடன் மாயாவி, ஆறு, சிங்கம் 1, 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல்வேறு நடிகைகள் பெயர் அடிபட்டு வந்த நிலையில் தற்போது திஷா பதானி நடிக்க உள்ளார்.