தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இணைய ரசிகர்களை கிறங்க வைக்கும் ‘மொக்க காதல்’ ஆல்பம் பாடல் - கனா பாலா

கிரிஷ் G இசையில், ராணவ், கனா பாலா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகும் ‘மொக்க காதல்’ ஆல்பம் பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் வைரலாகி வருகிறது.

Etv Bharat  ‘மொக்க காதல்’ ஆல்பம் பாடல்
Etv Bharat ‘மொக்க காதல்’ ஆல்பம் பாடல்

By

Published : Feb 15, 2023, 3:09 PM IST

கிரிஷ் G இசையமைப்பில், நீண்ட நாள்களுக்கு பின் கானா பாலா பாடல் வரிகள் மற்றும் குரலில் இயக்குநர் தமீஸ் இயக்கத்தில் மொக்க காதல் பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடல், இளைஞர்களின் காதல் கீதமாக இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. ‘காதல் தோல்வியில் உள்ள ஒருவன் தன் நண்பணுடன் சென்று அவனது மாமாவான கானா பாலாவை சந்திக்கிறான். அவர் அவனை ஆறுதல் படுத்த பாடும் பாடல் தான் இந்த மொக்க காதல் பாடல்’.

மிக அழகான விஷுவல், காதல் வலியை சொல்லும் வரிகள், கானா பாலாவின் மயக்கும் குரலில், கிரிஷின் அற்புதமாக இசையமைத்துள்ளார். மிகவும் அட்டகாசமாக இந்த பாடல் உருவாகி பட்டி தொட்டியெல்லாம் பரவி வருகிறது.

கானா பாலா பாடல் வரிகள்

தமிழ் சுயாதீன இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் கிரிஷ் G. முன்னதாக ஏ.ஆர். ரஹ்மானின் ‘நெஞ்சினிலே’ பாடலை வைத்து இவர் செய்த ‘ரீபெர்த் வெர்ஷன்’ மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பல மில்லியன் பார்வைகளை இப்பாடல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தமீஸ் இயக்கத்தில் உருவான மொக்க காதல் பாடல்

தற்போது காதலர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ள மொக்க காதல் பாடல் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அட்டகாசமான ஒரு சினிமா பாடல் போல இப்பாடலை அறிமுக இயக்குநர் தமீஸ் இயக்கியுள்ளார்.

இப்பாடலில் ராணவ், யாஷிகா ஆனந்த், ரஷீதா பானு ஆகியோருடன் கானா பாலாவும் இணைந்து நடித்துள்ளார். ழகரம் படப்புகழ் ஒளிப்பதிவாளர் ஜோஷப் விஜய், இப்பாடலுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் மற்றும் இளமாறன் நடன அமைப்பு செய்துள்ளனர். இப்பாடல் டெப்யூ (Debu) எனும் ஆல்பத்திலிருந்து வெளியாகியுள்ள முதல் பாடலாகும். இந்த ஆல்பத்திலிருந்து தொடர்ச்சியாக இன்னும் 3 பாடல்கள் வெளியாகும் என குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காதல் மனைவிக்கு ஷாருக்கானின் முதல் பரிசு என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details