தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மோகன்லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் டைட்டில் லுக் வெளியீடு - Malaikottai valiban

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்திற்கு மலைக்கோட்டை வாலிபன் என பெயரிடப்பட்டு அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Etv Bharatமோகன்லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!
Etv Bharatமோகன்லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

By

Published : Dec 25, 2022, 2:24 PM IST

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. 'ஆமென்' படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கிறார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் என்றும், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறார் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: புரொமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை? - நடிகை நயன்தாரா விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details