சென்னை:பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் படம் ஜெய்லர். இந்த படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒரே படத்தில் இரண்டு சூப்பர்ஸ்டார்.. அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்.. - Jailer movie update
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்துள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
jailer- ஒரே படத்தில் இரண்டு சூப்பர்ஸ்டார்
இந்த படத்தின் அசத்தலான அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மலையாள திரையுல ரசிகர்களால் கொண்டாடப்படும் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன் லால்லின் கதாபாத்திரம் என்னவென்று தெரியாத வகையில் படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:இருள் ஆளும் 'டிமான்டி காலனி 2': வெளியான ஃபர்ஸ்ட் லுக்!