தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மோகன்லால் நடிப்பில் விருஷபா - தி வாரியர்ஸ் அரைஸ்! ரிலீஸ் தேதி எப்போ? - kollywood updates

மோகன்லால், ஷனாயா கபூர், ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.

விருஷபா - தி வாரியர்ஸ் அரைஸ்
விருஷபா - தி வாரியர்ஸ் அரைஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 5:15 PM IST

சென்னை: ஷனாயா கபூர், சஹரா எஸ்.கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் இணைந்து நடித்து இருக்கும் 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் பான் இந்திய திரைப்படமாகும். இயக்குநர் நந்த கிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது.

இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் மோகன்லால் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டார். அதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எட்டியது.‌

காதல் மற்றும் பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு தீவிர நேர் எதிர் முனைகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட இந்த 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.‌ நவராத்திரி திருவிழாவின் போது இப்படத்தின் தயாரிப்பாளர்கள், 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திரைப்படம் தலைமுறைகளைக் கடந்த அப்பா மற்றும் மகன் இடையேயான டிராமா, ஆக்சன் எமோஷனல் மற்றும் விஎஃப்எக்ஸ் ஆகியவற்றுடன் அடுத்த ஆண்டிற்கான மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை கனெக்ட் மீடியா- பாலாஜி, டெலிஃபிலிம்ஸ் - ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் வருண் மாத்தூர், சௌரவ் மிஸ்ரா, ஏக்தா ஆர் கபூர், சோபா கபூர், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா, அபிஷேக் வியாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதையும் படிங்க:இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண வந்த அனுஷ்கா ஷர்மா!

ABOUT THE AUTHOR

...view details