சென்னை:அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு வேடங்களை ஏற்று நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். மீனாட்சி, ஸ்ரீ நிதி ஷெட்டி, மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் நீளம் அதிகம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதனையடுத்து இப்படத்தின் 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் புரொடக்சன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், விநியோகஸ்தர்கள் படத்தின் நீளம் குறித்து தெரிவித்திருந்தனர்.