தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஃபேண்டசி ராம்-காம் படத்தில் நடிக்கும் ’அகில உலக சூப்பர் ஸ்டார்’..! - சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

நடிகர் ’மிர்சி’ சிவாவின் அடுத்த திரைப்படமான “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரைப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேண்டசி ராம்-காம் படத்தில் நடிக்கும் ’அகில உலக சூப்பர் ஸ்டார்’..!
ஃபேண்டசி ராம்-காம் படத்தில் நடிக்கும் ’அகில உலக சூப்பர் ஸ்டார்’..!

By

Published : May 5, 2022, 6:36 PM IST

’சென்னை - 600028’, ’தமிழ்படம் -1&2’, ’வணக்கம் சென்னை’ போன்ற திரைப்படங்களில் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ’மிர்சி’ சிவா அடுத்தபடியாக ஒரு ஃபேண்டசி ராம்-காம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்திற்கு ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ என பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “இந்தப் படத்தில் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாய் ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவா நடிக்கிறார். செயற்கை நுண்ணறிவு கொண்ட சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவரது தோற்றம், உடல்மொழி ஆகியவை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளம்பெண் கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சுகுரியன் நடித்திருக்கிறார். இவர்களுக்கிடையே நடைபெறும் ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி தான் படத்தின் கதை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

இந்தத் திரைப்படத்தில் சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகர் மிர்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் மாகாபா ஆனந்த், பக்ஸ், ஷாரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கேபிஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி போனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: என்ன அழகு பா..! ஸ்மார்ட் லுக்கில் ஹைதராபாத்தில் விஜய்.. வைரலாகும் புகைப்படம்..!

ABOUT THE AUTHOR

...view details