தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஹீரோவாக களமிறங்கும் 'மைக் செட்' ஸ்ரீராம்... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! - யூட்யூப்பர்

ரொமான்ஸ் காமெடி ஜானரில், 'மைக் செட்’ ஸ்ரீராம் கதாநாயனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

ஹீரோவாக களமிறங்கும் ’மைக் செட்’ ஸ்ரீராம்
ஹீரோவாக களமிறங்கும் ’மைக் செட்’ ஸ்ரீராம்

By

Published : Nov 8, 2022, 3:10 PM IST

NN pictures சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், ’மைக் செட்’ ஸ்ரீராம் கதாநாயகனாக களமிறங்கும், ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இனிதே நடைபெற்றது.

நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ், தயாரிப்பாளராக தமிழ்த்திரையுலகில் கால்பதிக்கின்றனர். NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் “Production No 1” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவினைத் தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நடிகர் மைக்செட் ஶ்ரீராம் இப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தில் நடிக்கும் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களுக்காக தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தினை இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் அருள்ராஜ் கென்னடி இசையமைக்க, முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க:டிடிஎஃப் வாசன் தான் கடைசி... இனிமேல்... ஜி.பி. முத்துவின் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details