தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்...நடிகர் அனுபம் கெர் பதிலடி

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை மோசமான பிரச்சார திரைப்படம் என இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர் கூறியதற்கு நடிகர் அனுபம் கெர் பதிலடி கொடுத்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை சாடிய இஸ்ரேல் தயாரிப்பளார்
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை சாடிய இஸ்ரேல் தயாரிப்பளார்

By

Published : Nov 29, 2022, 12:58 PM IST

கோவா : இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் , 2022-ம் ஆண்டிற்கான IFFI இன் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் திரைப்படம் 1990-ல் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி பண்டிட்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சம்பவத்தின் போது காஷ்மீரில் இருந்த முதல் தலைமுறையின் வீடியோ நேர்காணல்களின் அடிப்படையில் இந்த கதை திரைப்படமாக உருவானது.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு, "தி காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படத்தை கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து மேடையில் பேசிய IFFI நடுவர் குழுவின் தலைவரான இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர் நதவ் லாபிட்,

"இதுபோன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவுக்கு ’தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்’, பொருத்தமற்ற ஒரு பிரச்சார திரைப்படமாகவும் மோசமான திரைப்படமாகவும் எங்களுக்குத் தோன்றியது. விமர்சனங்களை இந்த திரைப்பட விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என கூறினார்.

இதுகுறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் நடித்த நடிகர் அனுபம் கெர் ”இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட யூதர்களின் சமூகத்தில் இருந்து வந்த அவர் இப்படி பேசுவது வெட்கக்கேடானது. எனவே அவரது இந்த பேச்சின் மூலம், இந்த காஷ்மீர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளார் ”என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இளையராஜாவுக்கு தேசிய விருது கொடுத்தது ஏன் ? கங்கை அமரன் விளக்கம்..!

ABOUT THE AUTHOR

...view details