தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் மெஹந்தி சர்க்கஸ் நாயகன் - Actor Yogibabu

சீனு ராமசாமி இயக்கத்தில் மெஹந்தி சர்க்கஸ் நாயகன் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 13, 2022, 8:24 PM IST

சென்னை:தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி. இவர், இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில், மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம் உருவாகி வருகிறது.

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர். இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக கேசினோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்திலான நல்ல ஒரு காதல் கதையில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. வரும் டிசம்பரில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மேலும், இதர விபரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான தேர்வுகள் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பணப்பலனை அளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details