நடிகர் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று(ஜூன் 24) வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ’மாயோன்’.
அறிவியலையும், ஆன்மீகத்தையும் தொடர்புபடுத்தி உருவாக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும், பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.