சென்னை: தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ். ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர், நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாயோன்’.
படத்தை ’டபுள் மீனிங் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில், பார்வையற்றவர்களுக்கு பிரத்யேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் திரையரங்குகளில் ’உலக நாயகன்’ கமல்ஹாசனின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 500க்கும் மேலான திரையரங்குகளில் ’விக்ரம்’ படத்துடன் மாயோன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது.