தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

2021இன் மாஸ்டர்பீஸ் "மாஸ்டர்" - திருப்பூர் சுப்பிரமணியம் - 2021ன் மாஸ்டர்பீஸ் மாஸ்டர்

2021ஆம் ஆண்டு அதிக வசூலை கொடுத்த படம் விஜயின் மாஸ்டர் திரைப்படம்தான் என்று தமிழ்நாடு திரையரங்குகள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Master movie is first plase in most collecting tamil movie in2021  tripur subramanyam tamilnadu theatres committee head  2021 tamil movies  2021ன் மாஸ்டர்பீஸ் "மாஸ்டர்"  தமிழ்நாடு திரையரங்குகள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்  நடிகர் மற்றும் இயக்குனர் சங்கங்கள் எல்லாம் திரையரங்கு உரிமையாளர்களை கண்டுகொள்வதில்லை
2021ன் மாஸ்டர்பீஸ் "மாஸ்டர்" - திருப்பூர் சுப்பிரமணியம்

By

Published : Jan 2, 2022, 1:19 PM IST

Updated : Jul 23, 2022, 3:57 PM IST

சென்னை: 2021ஆம் ஆண்டு அதிக வசூலை கொடுத்த படம் விஜயின் மாஸ்டர் திரைப்படம்தான் என்று தமிழ்நாடு திரையரங்குகள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்தக் கரோனா பரவலுக்கு பின் தொழில் செய்ய முடியாத நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.

தமிழ்நாடு அரசும் முடிந்தவரை எங்களுக்கு உதவ முயற்சிக்கிறது. ஆனால் இதுவரை எந்தவித நிவாரணமும் தரவில்லை. ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் பாதிக்கப்பட்டிருந்த எங்களுக்கு மீண்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீண்டும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன.

மாஸ்டர்பீஸ் "மாஸ்டர்"

நடிகர் மற்றும் இயக்குநர் சங்கங்கள் எல்லாம் திரையரங்கு உரிமையாளர்களை கண்டுகொள்வதில்லை. முன்னணி நடிகர்களும் எங்களுக்காக குரல் கொடுக்க முன்வருவதில்லை” என்றார்.

மேலும், “கடந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டிய படங்களில் விஜய் நடித்த மாஸ்டர் படம்தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு பிறகு தான் மற்ற படங்கள். மாஸ்டர்தான் மாஸ்டர் பீஸ். டாக்டர், மாநாடு எல்லாம் அதற்கு பிறகுதான். முன்னணி நடிகர்களின் படங்களே திரையரங்குகளுக்கு வருவாய் ஈட்டித்தருகின்றன” என்றார்.

இதையும் படிங்க:RRR Postponed: பொங்கல் போட்டியிலிருந்து வெளியேறியது ஆர்.ஆர்.ஆர்

Last Updated : Jul 23, 2022, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details