தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 31, 2022, 9:59 PM IST

ETV Bharat / entertainment

இசையமைக்கும் மன்சூர் அலிகான் - புதிய ஆல்பம் பாடல் வெளியீடு!

நடிகர் மன்சூர் அலிகான், தற்போது ஒரு ஆல்பம் பாடலை எழுதி, பாடி, இசையும் அமைத்து உருவாகி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இசையமைக்கும் மன்சூர் அலி கான்..! : புதிய ஆல்பம் பாடல் வெளியீடு
இசையமைக்கும் மன்சூர் அலி கான்..! : புதிய ஆல்பம் பாடல் வெளியீடு

சேஷ்டைகளுக்குப் பெயர்போன நடிகர் மன்சூர் அலிகான் தற்போது இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். தமிழ் நாட்டின் பெருமைகளை விளக்கி, இலவசப் பாடல் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை அவரே எழுதி, இசையமைத்து, பாடியுமுள்ளார்.

மேலும், இந்தப் பாடலை திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் அனைத்துவிதமான விழாக்களிலும் இலவசமாக, எந்தவித முன் அனுமதியின்றி பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். விரைவில் இப்பாடலை படமெடுத்தும் வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பல வைரல் சேஷ்டைகளையும், தக் லைஃப்களையும் செய்து வந்த மன்சூர் அலிகான், தற்போது இசைத்துறையில் குதித்திருப்பது நெட்டிசன்களுக்கு பெரும் கன்டென்ட்களை அள்ளித் தருமென எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: 'இவளின் இருத்தலே மாபெரும் அழகியல்..!' : நேஹா சர்மா புகைப்படத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details