சென்னை:தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கொடி கட்டிப்பறந்தவர், மன்சூர் அலிகான். பின்னர் காமெடி வேடங்களில் நடித்து சிரிக்க வைத்தார். மேலும் சில படங்களை இயக்கியும் நடித்துள்ளார்.
இவர் தற்போது தனது மகன் அலிகான் துக்ளக் கதாநாயகனாக நடிக்க தானே தயாரித்து, இயக்கியுள்ள படம் "கடமான்பாறை". வரும் வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட, முன்கூட்டியே தீர்மானித்து பத்து லட்சம் ரூபாய் செலவில் வெளியீட்டு தேதியுடன் போஸ்டர் அடித்து, தயார் நிலையில் இருந்தார், மன்சூர் அலிகான்.