சென்னை:தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார் மன்சூர் அலிகான். விஜயகாந்த நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரனாக மிரட்டியிருப்பார். அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில், வில்லன் வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்தார். இவரது வில்லத்தனங்கள் இன்று வரை ரசிக்கக்கூடியவை.
இவர் சினிமா வளர்ச்சி காரணமாக நகைச்சுவை வில்லனாக மாறிவிட்டார். இவரை திரையில் பார்த்து பயந்தவர்கள் எல்லாம் தற்போது காமெடியனாக பார்த்து ரசிக்கின்றனர். இவர் சினிமா தவிர்த்து நிஜ வாழ்வில் தன்மையான மனதுக்காரர். சமூக சிந்தனை உள்ளவர். சமூகம் சார்ந்த கருத்துக்களை சமரசம் இன்றி பேசக்கூடியவர். கரோனா தடுப்பூசி குறித்து இவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை உண்டு பண்ணின.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, கைதி திரைப்படம் மன்சூர் அலிகானுக்காக எழுதிய கதை என்று லோகேஷ் கனகராஜ் சொல்லிருந்தார். அதோடு அவரது ரசிகன் நான் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் லியோ படத்தில் நிச்சயம் பேன் பாய் சம்பவம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.