தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அஜித்துடன் மஞ்சு வாரியர் பைக் ரைடு - வைரலாகும் புகைப்படங்கள் - அஜித்துடன் மஞ்சு வாரியர்

நடிகர் அஜித்துடன் லடாக்கிற்கு பைக் ரைடு சென்றுள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்துடன் மஞ்சு வாரியர்
அஜித்துடன் மஞ்சு வாரியர்

By

Published : Sep 3, 2022, 3:45 PM IST

நடிகர் அஜித் எப்பொழுதும் அவ்வப்போது பைக் ரைடு செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது ’அட்வெஞ்சர் ரைடர்ஸ் இந்தியா’ (Adventure riders India) எனும் குழுவுடன் இணைந்து இமயமலை அருகே உள்ள லடாக்கிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் அந்தக்குழுவோடு சேர்ந்து அஜித்துடன் பயணம் செய்யத் தொடங்கியுள்ளார்.

இந்த பைக் ரைடு குறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு நன்றி. அட்வெஞ்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவுடன் சேர்ந்து இரு சக்கர வாகனப்பயணத்தில் இணைவதில் பெருமையடைகிறேன்”, எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் எனத் தகவல்கள் பரவி வரும் நிலையில், மஞ்சு வாரியர் அஜித்துடன் சேர்ந்து பைக் பயணம் சென்றுள்ளார்.

அஜித்துடன் மஞ்சு வாரியர்

இதையும் படிங்க:இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்... குவியும் வாழ்த்து...

ABOUT THE AUTHOR

...view details