தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'துணிவு' படத்தில் அஜித்தின் பெயர் என்ன? - மனம்திறந்த மஞ்சு வாரியர் - h vinoth

அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர். அவர் துணிவு படத்தில் தான் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மஞ்சு வாரியர் அளித்த பேட்டி
மஞ்சு வாரியர் அளித்த பேட்டி

By

Published : Jan 6, 2023, 7:52 PM IST

மஞ்சு வாரியர் அளித்த பேட்டி

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் நடித்துள்ள அஜித்துடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அந்த கேள்வி பதில் பகுதியைக் கீழே காண்போம்.

தமிழில் இது உங்களுக்கு இரண்டாவது படம்.. அஜித் சாருடன் சேர்ந்து முதல் படம் செய்து இருக்கீங்க.. இந்த படத்தில் உங்கள் அனுபவம் பற்றி?

இந்தப் படம் எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது. ஏனெனில், நான் முதல்முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கிறேன். ஹெச். வினோத்துடன் முதல்முறையாக நடிக்கிறேன். அது மட்டும் இல்லாமல் இதுதான் முதல் முறையாக இதுபோன்ற முழுமையான ஒரு ஆக்‌ஷன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தின் மூலம் துறை சார்ந்து மட்டுமின்றி பெர்சனலாகவும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

ஷூட்டிங்கில் முதல்முறையாக அஜித்தை பார்த்தபோது எப்படி இருந்தது?

அவரைப் பற்றி படத்தில் நடிப்பதற்கு முன்பாவே அனைவருக்கும் மரியாதை கொடுப்பார். நன்கு பழகுவார் என கேள்விப்பட்டதுண்டு. அதனால் நான் அதை எதிர்பார்த்தே அவரை சந்தித்தேன். ஆனால், சந்தித்த பிறகு தான் எல்லோரும் கூறுவதை விட அதிகமாகவே அவர் அனைவருக்கும் மரியாதை அளித்தார். நன்றாகப் பழகினார். அது மட்டுமில்லாமல் வார்த்தைகளால் இல்லாமல், தன் செயல் மூலமாகவே ஒருவரை இன்ஸ்பையர் செய்வார். அதனை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

ட்ரெய்லரில் துப்பாக்கி உபயோகிப்படுத்தியதை பார்த்தோம்.. இதற்காக பயிற்சி எடுத்தீர்களா?

அதற்கு நான் அஜித் சாரிடம் தான் வெட்கமே இல்லாமல், எனக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் எனக் கேட்டேன். அவர் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். ஏனென்றால், கண்மணி கதாப்பாத்திரம் இதுபோன்றவற்றில் மிகவும் பயிற்சி பெற்ற பெண். அதனால், பயிற்சி எடுத்தேன். அதற்கு அஜித் சார், வினோத் சார், சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் என அனைவரும் உதவினர்.

துணிவு எந்த மாதிரியான படம்?

துணிவு ஒரு முழுமையான என்டர்டெய்னர் படம். அஜித் சாரை ரசிகர்கள் எப்படி பார்ப்பார்களோ... அதற்கு ஏற்றார் போலவே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண ஆக்‌ஷன் படமாக இல்லாமல் எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருக்குனு.

துணிவு படத்தில் அஜித்தின் பெயர் என்ன?

இந்தப் படத்துல அஜித் சார் பெயர் என்ன, அவர் யாரு என்ன என்பதை இன்னும் ஒரு வாரத்தில் படம் வெளியாக போகிறது. காத்திருந்து படத்தை பாருங்க. படம் உங்களுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம படத்தை தியேட்டர்ல பாருங்க. கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க’ என்றார்.

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனோடு விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருகின்றனர்.

இதையும் படிங்க:29 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் நடிகர்.. AK புதிய படத்தின் அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details