சென்னை:கணேஷ் என்டர்டெயின்மென்ட் T.R. ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து, எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள " கடமையை செய்" படத்தை தயாரித்துள்ளனர். படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து T.R.ரமேஷ், ஜாகீர் உசேன் ஆகியோர் விமல் நாயகனாக நடிக்கும் 'மஞ்சள் குடை' படத்தையும் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார்.
இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ரேணுகா ராதாரவி ,Y.G. மகேந்திரன், ’விஜய் டிவி’ ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை சிவம் ராஜாமணி என்பவர் எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக பிரவீன் குமார், மற்றும் இசையமைப்பாளராக ஹரி பணியாற்றுகின்றனர்.